தமிழக பாஜக தலைவரான எல்.முருகன்! யார் இந்த எல்.முருகன்? அமித்ஷாவின் பக்கா ஸ்கெட்ச்!! - Seithipunal
Seithipunal


மிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனால் அந்த இடம் தற்போது காலியாக இருக்கிறது. அந்த இடத்திற்கு தற்போது கடும் போட்டி நிலவி வந்தது. 

கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்தி முடித்த பின்னர் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் என பாஜக மேலிடம் அறிவித்து இருந்தது. இதனால் தமிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார்? என்ற கேள்வி பல நாட்களாக இருந்து வந்தது.  

தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்க 11 பேர் கொண்ட பட்டியலை பாஜக தயாரித்து, பாஜக தேசியத் தலைவருக்கு அனுப்பி இருந்தது. அந்த பட்டியலில், பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி. பி. ராதாகிருஷ்ணன்,  கே. டி. ராகவன், மதுரை சீனிவாசன், கருப்பு முருகானந்தம்,  ஏ. பி. முருகானந்தம், ஏ. என். எஸ். பிரசாந்த், குப்புராம் ஆகியோர்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. 

இந்நிலையில் தற்போது, பாஜகவின் தமிழக தலைவராக தேசிய எஸ்.சி., எஸ்.டி, ஆணைய துணைத் தலைவராக இருக்கும் எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தை பொறுத்தவரை தலித்துகளுக்கு பிஜேபிக்கு எதிரான கட்சி என்ற தோற்றம் இருந்துவந்தது. இந்த கூற்றை மாற்றி அமைக்கவே தலித் ஒருவர் பாஜக தலைவராக அறிவிக்க வேண்டும் என்று பிஜேபி திட்டம் தீட்டி வந்தது. 

ஏனென்றால், தேசிய அளவில் பிஜேபி மிக பெரிய கட்சியாக இருந்தாலும், ஆளும் காட்சிகளை அலேக்காக தூக்கி விட்டு ஆட்சிக்கு வந்தாலும், தென் மாநிலங்களில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் டெப்பாசிட் இல்ல, வெறும் 3 சதவிகித ஒட்டுக்கே திண்டாடும் நிலைமைதான் பிஜேபிக்கு இருக்கிறது. 

யார் இந்த எல்.முருகன்?

எல்.முருகன் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் பிறந்தவர். இவருக்கு வயது 45. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவராக பதவி வகித்தவர். மேலும், 15 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய முன்னனுபவம் உள்ளது. 

இவர், Doctorate in Law டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பும், சென்னை பல்கலைக் கழகத்தில் முதுகலை சட்டப் படிப்பும் படித்து முடித்தவர். மேலும், இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவரும் கூட. 

கடலூரைச் சேர்ந்த டாக்டர் கிருபாநிதி 2000ஆம் ஆண்டு தமிழக பிஜேபியின் தலைவராக நியமிக்கப்பட்டு, 3 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். அதன்பிறகு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

L Murugan appointed as tamilnadu bjp leader


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->