உடல்நலக்குறைவால் கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு காத்திருந்த அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை.

பொதுமக்கள் மட்டும் இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட முன்கள பணியாளர்களும் அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து தனிமைப்படுத்தப் பட்டு கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kunnam aiadmk mla ramachandiran corona positive


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->