கர்நாடக சட்டசபையில் அனைவருக்கும் ஷாக் கொடுத்த குமாரசாமி.! உற்சாகத்தில் பாஜகவினர்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை சரிந்துள்ளது. இரு கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து ஆளும் கூட்டணி கட்சிக்குஅதிர்ச்சி கொடுத்தனர். 

16 எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. இருந்தபோதிலும் பலனில்லை. இதற்கிடையே தங்களுக்கு தான் பெரும்பான்மை உள்ளது என்று சட்டசபையில்  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாஜக தரப்பு கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த வார இறுதியில் கர்நாடகா சட்ட மன்றத்தில் விவாதம் நடைபெற்றது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் ஆளும்கட்சி காலம் தாழ்த்திய வருவதால், கோபமடைந்த பாஜகவினர் சட்டசபையில் தர்ணாவில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில் சட்டசபை கூடியது, அப்போது கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை புதன்கிழமை நடத்த வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ்குமாரிடம், முதலமைச்சர் குமாரசாமி, சட்ட அமைச்சர் கிருஷ்ண பைர கவுடா கோரிக்கை வைத்துள்ளனர்.

குமாரசாமிக்கு புதன்கிழமை வரை அனுமதி வழங்க சபாநாயகர் ரமேஷ்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kumaraswamy announcement for vote of confidence


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->