கேள்விகளை அடுக்கிய பத்திரிக்கையாளர்கள்.! ஒற்றை கேள்வியில் ஸ்தம்பிக்க வைத்த குமாரசாமி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் பதவி விலகியதால், முதலமைச்சர் குமாரசாமிக்கு சட்டப்பேரவையில் மெஜாரிட்டி பலம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

kumarasamy,seithipunal

இதன் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சித்தராமையா, சிவகுமார், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் அதிருப்தி எம்எல்ஏக்களை சமரசம் முயற்சி செய்து வருகின்றனர். மேலும், இவர்களுடன் தேவகவுடா, குமாரசாமி, சிவராமலிங்கம் ஆகியோரும் இணைந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா என்றால்,? இல்லை என்றே கூற வேண்டும். சபாநாயகர் ரமேஷ்குமார் குமாரசாமிக்கு உதவி புரியும் வகையில், அந்த எம்எல்ஏக்களின் ராஜினாமாவை இதுவரை அங்கீகரிக்காமல் இருக்கின்றார். வரும் 17ஆம் தேதி சட்டப்பேரவையில் நேரடியாக ஆஜராகி ராஜினாமா கடிதத்தை கொடுத்து எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

kumarasamy,seithipunal

இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த, கர்நாடக முதல்வர் குமாரசாமி, மிகவும் ஆவேசமாக, "நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்.? நான் ராஜினாமா செய்ய வேண்டியதற்கான அவசியம் தான் என்ன?" என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kumarasamy press meet today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->