எடப்பாடி பழனிசாமியின் புதிய அமைச்சர்.! அந்த புதிய மாவட்டத்துக்கு சொந்தக்காரரா.?! - Seithipunal
Seithipunal


 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பொழுது எந்தந்த அமைச்சர்கள் என்ன என்ன துறை வகித்தார்களோ, அதே துறை அமைச்சராக தான் ஓபிஎஸ் பொறுப்பேற்ற போதும், அதன் பிறகு ஈபிஎஸ் பதவியேற்ற போதும் இருந்து வருகிறார்கள். அதிமுக அணிகள் பிரிவின் போதும், இணைப்பின் போதும் மட்டுமே சில மாற்றங்கள் நிகழ்ந்தன. 

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசு அமைந்தது முதல், அணிகளின் இணைப்பிற்கு பிறகு அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. அதிமுக அரசு என்றாலே ஜெயலலிதாவின் அதிரடியால் அடிக்கடி அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுவது தான் வழக்கம். 

அதுபோலவே தற்பொழுது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியில் இருந்து எம்.மணிகண்டனை திடீரென நீக்கினார். இதையடுத்து அடுத்ததாக அமைச்சராவப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவரான குமரகுருவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்க காரணமும் குமரகுரு கோரிக்கையை ஏற்றுதான் என கூறப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை உளுந்தூர்பேட்டை தொகுதியில் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் குமரகுரு தான் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kumaraguru has new minister


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->