ஒரே மேடையில் தோன்றிய இரு துருவங்கள்..!! எல்லாம் பழனிச்சாமியின் செயல்..!! ரத்தத்தின் ரத்தங்கள் குதூகலம்..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த ஓசூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமியும் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரையும் ஒரே மேடையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது அதிமுகவினரை வியக்க வைத்துள்ளது. 

கிருஷ்ணகிரியில் கடந்த 11 ஆண்டுகளாக கே.பி முனுசாமியும் தம்பிதுரையும் எதிரெதிர் துருவங்களாக நின்று அரசியல் செய்து வருகின்றனர். ஜெயலலிதா காலத்தில் இருந்தே இவர்கள் இருவருக்கும் ஒத்துப் போவதில்லை. இதன் காரணமாக கடந்த தேர்தலில் போட்டியிட கரூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தார் ஜெயலலிதா. 

தம்பிதுரை மாவட்ட அளவிலான அரசியலை விட்டு விலகி இருப்பதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.பி முனுசாமியின் கை தற்பொழுது ஓங்கி உள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து செயல்பட தொடங்கினாலும் அவர்களின் ஆதரவாளர்கள் இடையே எப்பொழுதும் ஒரு முரண்பாடு நிலவி வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஓசூரில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கே.பி முனுசாமி தம்பிதுரையை புகழ்ந்து பேசி உள்ளார். இதை கண்ட அதிமுக தொண்டர்கள் வாயடைத்து போனார்கள். அதேபோன்று  தம்பி துரை கேபி முனுசாமியை பதிலுக்கு புகழ்ந்து பேசினார். கடந்த 11 ஆண்டுகளாக எதிரெதிர் துருவங்களாக இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசி இருப்பது அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களை குதூகலம் அடையச் செய்துள்ளது. இதற்கு காரணம் பழனிச்சாமியின் ஒற்றை தலைமை தான் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக தனது பலத்தை முழுமையாக வெளிப்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KP Munusami and Thambidurai appeared on the same stage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->