#கோவை || நாங்க இருக்கோம்., தட்டிக்கேட்க நீ யார்? பளார் விட்ட போலீஸ் கைது.! - Seithipunal
Seithipunal


கோவை, பீளமேட்டில் உணவு டெலிவரி ஊழியர் மோகனசுந்தரம் அளித்த புகாரின் பேரில், போக்குவரத்து காவலர் சதீஸ் கைது செய்யப்பட்ட நிலையில், பணியிடை நீக்கம்செய்து கோவை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த மூன்றாம் தேதி மாலை 05.45 மணியளவில், கோவை சிங்காநல்லூர் போக்குவரத்து காவல் நிலைய காவலர் 2846 திரு.சதிஸ் என்பவர், E2 பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஃபன் மால் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் பணியில் இருந்துள்ளார். 

அப்போது மேற்படி போக்குவரத்து சிக்னலில் இருந்து சென்ற தனியார் பள்ளி வாகனம் ஒன்று ரோட்டில் குறுக்கே வந்த ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றுள்ளது. 

அப்பள்ளி வாகனத்தை சிக்னல் அருகே சின்னியம்பாளையத்தை சேர்ந்த Swiggy நிறுவனத்தில் பணி செய்யும் திரு.மோகனசுந்தரம் என்பவர் தடுத்து நிறுத்தி அதன் ஓட்டுனரிடம் சம்பவம் குறித்து கேள்வி கேட்டுள்ளார்.

அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் சதீஸ், மோகனசுந்தரத்திடம் சென்று "இதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம் நீ யார்" என்று கேட்டு அவரை கைகளால் தாக்கியதாக வாட்ஸ்அப் குழுவில் வீடியோ வந்துள்ளது. 

இது தொடர்பாக மோகனசுந்தரம் இன்று 04.06.2022 ம் தேதி கொடுத்த புகாரின் பேரில் E2 பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போக்குவரத்து காவலர் சதீஸ் கைது செய்யப்பட்டு , தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai traffic cop arrested


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->