தோற்கடித்த வேட்பாளருக்கு., ஆதரவாக பிரச்சாரம்.. மிரட்டிய ஸ்டாலின்..?! கதறி அழும் கோவை தங்கம்.?!  - Seithipunal
Seithipunal


அதிமுக கூட்டணியில் இருக்கும் ஜிகே வாசனின் தமாகா கட்சியில் இருந்து விலகியவர்தான் கோவை தங்கம், தமாகாவில் இருந்த பொழுது அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவருக்கு தற்போது சீட் கொடுக்கவில்லை என்ற கோபத்தில் கட்சியில் இருந்து அவர் விலகி எடுத்த முடிவுகள் தற்போது அவரை தரம் தாழ்த்தி உள்ளது.

தமாகா கட்சியிலிருந்து விலகிய கோவை தங்கம் சுயேச்சையாக வால்பாறை தொகுதியில் போட்டியிட முயற்சித்துள்ளார். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் அவரிடம் அத்தொகுதியில் போட்டியிடக் கூடாது என்று கட்டளை பிறப்பித்துள்ளார். 

கடந்த 2011 ஆம் ஆண்டு வால்பாறை தொகுதியில் தங்கத்தை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் ஆறுமுகம் தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சொல்லி ஸ்டாலின் வற்புறுத்தியிருக்கிறார். 

இதுகுறித்து கோவை தங்கம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். தன்னை தோற்கடித்த வேட்பாளருக்கு தன்னையே பிரச்சாரம் செய்யும் நிலைக்கு ஆளாகி விட்டேன். எனக்கு விருப்பமே இல்லை என்றாலும் அதை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது." என்று மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai thangam speech about stalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->