திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.! அதிர்ச்சியில் முகஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சில முக்கிய நிர்வாகிகள் இருக்கும் கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவி வருகின்றனர். 

இந்நிலையில், கோவை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுக பக்கம் சென்று இருப்பது திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் வடவள்ளி எம்ஜிஆர் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபு, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். 

அதிமுகவின் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், கோவை வடக்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர்  இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai dmk members join admk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->