#கோவை | காந்தி சிலையிடம் மனு அளித்த தூய்மை பணியாளர்கள்! - Seithipunal
Seithipunal


கோவை மாநகராட்சியில் தூய்மை பணி, திடக்கழிவு மேலாண்மை, சுகாதார மற்றும் ஓட்டுநர் பணிகளில் சுமார் 4500-க்கு மேற்பட்ட  தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இவர்களுக்கு தினமும் ஊதியமாக 323 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், சில ஆண்டாக ஊதிய உயர்வு எதுவும் செய்யப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15 ஆயிரம் ரூபாய் போனஸாக வழங்க வேண்டும், பணிநிரந்தரம் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கோவை மாநகராட்சியில் பணிநிரந்தரம், அரசு அறிவித்த கூலி உயர்வு உட்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் 500 க்கும் மேற்பட்டோர், மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள  காந்தியடிகள் சிலையிடம் மனு அளித்தனர்.

முன்னதாக அள்ளும் திமுக அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தொழிலாளர் சங்கங்கள் இன்றைய போராட்டத்தில் பங்கேற்கவில்லை. பணிக்கு வருபவர்களை யாரும் தடுக்க கூடாது என்ற எச்சரிக்கையும் மாநகராட்சி தரப்பில் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மாநகராட்சிக்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.3750/- போனஸ் தொகை வழங்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai cleaning workers protest oct 2


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->