நாளைக்கு யாராவது தடுத்தீங்க கடுமையான நடவடிக்கை பாயும் - எச்சரிக்கை விடுத்த மாநகராட்சி ஆணையர் பிரதாப்! - Seithipunal
Seithipunal


கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை பணிக்கு வரும் தூய்மை பணியாளர்களை தடுத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று. கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார் 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிவிப்பில், "கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு எதிராக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் கூட்டமைப்பினர் மூலம் நாளை 02.10.2022 முதல் நடைபெறும் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அருந்ததியர் முன்னேற்ற கழகம் தமிழ்நாடு, தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கம் தமிழ்நாடு, ஜனசக்தி லேபர் யூனியன், முத்தழிழ் அறிஞர் கலைஞர் துப்புரவு மற்றும் பொது பணியாளர்கள் முன்னேற்றச் சங்கங்கள் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு ஆதரவாக மேற்படி, பொது வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்காது என தெரிவித்து எழுத்து பூர்வமாக மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு கடிதம் அளித்துள்ளனர்.

எனவே, பணிக்கு வரும் தூய்மைப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தாலோ, அல்லது அவர்கள் மீது சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலோ காவல் துறையினர் மூலம் சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai cleaning workers protest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->