கொடநாடு விவகாரம்: உச்சநீதிமன்றம் சென்ற முக்கிய சாட்சி.! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் புகுந்து கொள்ளையடித்தது. அப்போது, ஓம் பகதூர், கிருஷ்ண தாப்பா காவலாளிகளை அந்த கொள்ளை கும்பல் கொலை செய்தது.

இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா, 5 தனிப்படைகளை அமைத்தார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி கார் ஓட்டுநர் கனகராஜ் என்பது தெரியவந்த நிலையில், அவர் 2017 ஏப்ரல் 28-ல் ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இனோவா கார் மோதி கனகராஜ் உயிரிழந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதில், 11 பேரின் பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டதுடன், 97 பெயர்கள் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, 2019, ஜனவரி மாதம், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உடன் இணைந்து சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர், எடப்பாடி பழனிசாமிக்கும் கொடநாடு கொலை, கொள்ளைக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினர்.

தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு, இந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்க்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இந்த கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் அரசு தரப்பு சாட்சியாக இருந்த ரவி என்பவர், இந்த வழக்கில் கூடுதல் விசாரணையை நடத்தக் கூடாது என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தார்.

இதனை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், கொடநாடு வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த காவல் துறைக்கு அதிகாரம் உள்ளது. வழக்கின் எந்த கட்டத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும். எனவே இந்த போலீசாரின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் கூடுதல் விசாரணையை நடத்தக் கூடாது என்று, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் அரசு தரப்பு சாட்சியாக இருந்த ரவி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kodanadu witness appeal to sc


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->