கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் இரண்டு பேர் கைது.! தனிப்படை போலீசார் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை விவகாரம் தொடா்பாக டெல்லி புலனாய்வு பத்திரிக்கை ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் வெளியிட்ட வீடியோ தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய சாயன், மனோஜ் ஆகியோரை மத்திய குற்றவியல் காவல் துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இருவரும் சென்னை எழும்பூர்  நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இவர்கள் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என்று காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு காவல் துறையினரும், அரசு தரப்பு வழக்கறிஞரும் முறையாக பதில் அளிக்காததால் கைது செய்யப்பட்ட இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். 

இதற்கிடையே, நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய கோரி அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞர் நந்தகுமார் இந்த மனுவைத் தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், கொடநாடு கொலை வழக்கில் சயான் மற்றும் மனோஜூக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் காரணமாக விரைவில் சயான் மற்றும் மனோஜ் இருவரையும் கைது செய்ய தனிப்படை தேடி வருகிறது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிஜின்குட்டி, தீபு நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிது இருந்த நிலையில், தனிப்படை போலீசார் இருவரையும் கேரளாவில் வைத்து கைது செய்து உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KODANADU ISSUE 2 VICTIMS ARRESTED


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->