வயிற்றெரிச்சலில் முதல்வர் மீது அபாண்ட பழி சுமத்துகிறார்கள்! கொந்தளிக்கும் தமிழக அமைச்சர்! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, அந்தியூர் ராஜா கிருஷ்ணன், பவானிசாகர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல் சூப்பிரண்டு சக்தி கணேசன் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்ட முடிவில் அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியவை,

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் சிறப்பாக ஆட்சி நடத்தி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், மீதமுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுப்போம்.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் மீது எதிர்கட்சியினர் அபாண்ட பழி சுமத்துகின்றனர். பொது மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுத்து வருகிறோம். இது எதிர்கட்சியினருக்கு வயிற்றெரிச்சலையும், பொறாமையையும் அதிகம் ஏற்படுத்தி உள்ளது என்று அமைச்சர் கருப்பணன் கூறினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kodanad issue Minister KC Karuppannan press meet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->