பாஜகவில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்.. கோவையில் குஷ்பு பேட்டி..!! - Seithipunal
Seithipunal


கோவை பாஜக சார்பில் "நம்ம ஊரு பொங்கல்" என்ற தலைப்பில் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட பாஜகவினர் சார்பில் வெள்ளலூர் பைபாஸ் சாலை அருகே ஆனைமலை அம்மன் கோவில் அருகே ரேக்ளா பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்து கொள்ள வந்தார்.

ரேக்ளா பந்தயத்தை துவக்கி வைத்த குஷ்பூ செய்தியாளர்களிடம் பேசியதாவது "பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. நானும் பாரதிய ஜனதா கட்சியில்தான் இருக்கிறேன். எல்லா பெண்களும் பாஜகவை விட்டு வெளியே போகவில்லை. பிற கட்சியினர் என்னைப்பற்றி தவறாக பேசும் பொழுது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனக்காக பாஜக பெண் நிர்வாகிகள் நடத்திய போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார். 

ஒரு சிலர் பாஜகவில் இருந்து வெளியேறுவதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஒட்டுமொத்தமாக கூற முடியாது. என்னை போன்று பலர் பாஜகவில் இன்னும் இருக்கின்றனர். அதனால் ஒரு சிலர் சொந்த காரணங்களுக்காக பாஜக விட்டு வெளியேறுவதை வைத்து பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூற முடியாது" என செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Khushbu said women are safe in BJP at coimbatore


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->