ஒரு குவாட்டர் 160 ரூபாய்.! 7 சதவிகிதம் விலையை உயர்த்த ஒப்புதல்.! சோகத்தில் மூழ்கிய மதுப்பிரியர்கள்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் மதுபானங்களின் விலையை 7 சதவீதம் அளவுக்கு உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கேரளா மாநிலத்தில் மதுபானங்களை கேரள மாநில அரசே விற்பனை செய்து வருகிறது. இதற்கு என்று தனி வாரியம் ஒன்றும் செயல்பட்டுவருகிறது. இந்த வாரியம் பல மாதங்களாக மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து வருகிறது.

தற்போது விற்பனை செய்யப்படும் விலையை விட கூடுதலாக 15 சதவிகிதம் விலையை உயர்த்த வேண்டும் என்று அந்த வாரியம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், மதுபான விற்பனை வாரியத்தின் இயக்குனர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, மதுபானங்களின் விலையை 7 சதவீதம் அளவுக்கு உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை கேரள அரசு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய விலையின் அடிப்படையில், 180 ML கொண்ட ஒரு மது பாட்டிலின் விலை சுமார் 160 வரை உயரும் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KERALA Liquor rate high


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->