சுற்றுலாத்துறையை முடக்கவே போராட்டங்கள்! வேதனையுடன் கூறிய முதலமைச்சர்! - Seithipunal
Seithipunal


கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயதிற்குட்பட்ட அனைத்து வயது பெண்களுக்கு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து பெண்கள் பலரும் கோவிலுக்குள் செல்ல முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இதற்கு பல இந்து அமைப்புகளும், பா. ஜனதா கட்சியினரும் மற்றும் ஐயப்ப பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பெண்களை தடுத்து ஐயப்ப பக்தர்கள் பலரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெண்கள் யாரும்  சாமி தரிசனம் செய்யாமல் திரும்பி சென்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில் வசந்த உற்சவம் என்ற மலர் கண்காட்சியை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியவை, கேரள சுற்றுலாத்துறையை முடக்கவே போராட்டங்கள், முழு அடைப்பு நடைபெறுவதாக வேதனை தெரிவித்துள்ளார். அவர், தொடர் போராட்டங்களால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்திருப்பதாகவும், அந்த அளவுக்கு இங்கு நிலைமை மோசமாக இருப்பதாக கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala CM Pinarayi Vijayan press meet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->