மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அமைச்சர்! இ.பி.எஸ், ஓ.பி.எஸ் வெளியிட்ட கூட்டறிக்கை!  - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கவுந்தப்பாடியில் குடிநீர் திட்ட பணிகளின் துவக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு திட்ட பணிகளை துவக்கி வைத்தார். 

இதன் பின் செய்தியாளர்களுக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் அளித்த பேட்டி: தமிழகத்தில் சென்னை கோயம்பேட்டில் மட்டுமே குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. மற்ற இடங்களில் எல்லாம் காற்று மாசு கட்டுப்பாட்டிற்குள்தான் உள்ளது என்றார்.

சுற்றுச்சூழல் திருத்த சட்டம் 2020 தொடர்பாக ஆராய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குழு அமைத்துள்ளார். அந்த குழு ஆய்வு செய்து வழங்கும் அறிக்கையை பெற்று முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார் என்றார். 

தமிழகத்தில் விலைவாசிகள் கணிசமான அளவில் குறைந்துள்ளதால் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமிதான் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார்  என தெரிவித்தார். 

அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் யார் என்பது குறித்தெல்லாம் பேசக்கூடாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிக்கை விடுத்திருந்த நிலையில் அமைச்சர் கே.சி.கருப்பணனின் இந்த கருத்து அதிமுகவில் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இதனிடையே, சர்ச்சை கருத்தை தெரிவித்த கருப்பண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

K.C.Karuppannan press meet about next cm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->