#தமிழகம் | சட்டவிரோத கல்குவாரி : புகார் அளித்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றி படுகொலை! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகளை மூட வலியுறுத்தி போராடிய சமூக ஆர்வலர், லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் மாவட்டம், க பரமத்தி அருகே குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் சட்ட விரோதமாக இயங்கி வரும் கல்குவாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். 

ஜெகநாதனுக்கும், தனியார் கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் செல்வகுமார் நடத்தி வந்த கல்குவாரிக்கு உரிமம் முடிந்த நிலையில், அதனை மூட வலியுறுத்தி பல்வேறு புகார்களை ஜெகநாதன் அனுப்பியிருக்கிறார்.

இந்த நிலையில், சம்பவம் நடந்த நேற்று இரவு, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜெகநாதன் மீது, அவ்வழியாக சென்ற மினி லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். 

விபத்தை ஏற்படுத்திய அந்த மினி லாரி கல்குவாரி உரிமையாளர் செல்வகுமாருக்கு சொந்தமானது என்பது போலீசாரின் விசாரணைகள் தெரியவந்தது.

இதனை எடுத்து திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக, கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், லாரி ஓட்டுநர் சக்திவேல் ஆகியோர் மீது, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், தலைமுறைவாகியுள்ள செல்வகுமார் மற்றும் மின்னிலாரி ஓட்டுநரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karur kal kuvari murder case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->