கரூர் மாணவி தற்கொலை., பின்னணியில் பெரும் அரசியல் புள்ளி.! நடவடிக்கை எடுக்க தயங்கிய காவல்துறை.?!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கும், கல்லூரி மாணவிகளுக்கும் பாலியல் தொந்தரவுகள் கொடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த பாலியல் தொல்லை தொந்தரவு காரணமாக அண்மையில் கோவையில் ஒரு பள்ளி மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், இன்று கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளி மாணவி எழுதியுள்ள கடித்தது படிப்பவர்கள் நெஞ்சை பதற வைக்கிறது.

அந்த மாணவி எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

"பாலியல் தொல்லைக்கு ஆளாகிய கடைசி பெண் நான் நானாகத்தான் இருக்க வேண்டும். 
என்னை இந்த முடிவு எடுக்க யார் வைத்தார்கள் என்று நான் சொல்ல பயமாக இருக்கிறது.
நான் இந்த பூமியில் வாழ்வதற்காக ஆசைப்பட்டேன். ஆனால், இப்போது பாதியிலேயே போகிறேன்.
இன்னொரு தடவை இந்த உலகத்தில் நான் வாழ்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்.
பெரியவளாகி நிறைய பேருக்கு உதவி பண்ண வேண்டும் என்று எனக்கு ஆசையாக உள்ளது. ஆனால் முடியவில்லை.

ஐ லவ் யு அம்மா, சித்தப்பா, மாமா, அம்மு உங்க எல்லோரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், நான் உங்ககிட்ட சொல்லாமல் போகிறேன். மன்னிச்சிடுங்க., 

இனி எந்த ஒரு பெண்ணும் என் போல் சாகக் கூடாது" என்று அந்தப் பள்ளி மாணவி அந்த கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேலு அவர்கள் ஒரு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார்.  காவல் ஆய்வாளர் கண்ணதாசனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணம் என்ன தெரியுமா? ஆம்.., தற்கொலை செய்துகொண்ட அந்த மாணவி காவல் ஆய்வாளர் கண்ணதாசனிடம் புகார் அளித்துள்ளார். மாணவியின் புகார் குறித்து காவல் ஆய்வாளர் கண்ணதாசன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற காரணத்தினால் தான் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி எஸ்பி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உண்மையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி, தனது தற்கொலை கடிதத்தில் சொல்லியது போல் காவல்துறையின் அடக்குமுறை நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு ஒரு பெரிய அரசியல்வாதி அல்லது அரசியல் பின்புலம் உள்ளவனாக இருப்பானோ அந்தக் கொடூரன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த பள்ளி மாணவி தற்கொலை சம்பவத்தில் அந்த கொடூரன் யார்? அவன் யாராக இருந்தாலும் கைது செய்து, அவனுக்கு தக்க தண்டனை பெற்றுத்தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை காவல்துறையினர் இதுபோன்ற அலட்சியம் செய்தால்., "நான் வாழத்தான் ஆசைப்பட்டேன்., ஆனால் சாகிறேன்.," என்று சொல்லி சென்ற அந்த மாணவி போல் எத்தனை உயிர்கள் போகும் என்று தெரியாது. இனியும் ஒரு உயிர்கூட பறிபோகக் கூடாது என்பது மக்களின் கோரிக்கையாக காவல்துறைக்கு வைக்கப்படுகிறது.

மேலும் ஒரு முக்கிய செய்தி.,

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karur girl suicide issue inspectoer no action


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->