கலைஞரின் பேனா நினைவு சின்னம்.. சீமானுக்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை உடைப்பேன் என கூறிய சீமானுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து ஓ பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று தனது தரப்பு வேட்பாளரை அறிவித்தார். அப்போது பேசியவர் பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என தெரிவித்திருந்தார்.

மேலும் இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் தனிச் சின்னத்தில் எங்களது வேட்பாளர் போட்டியிடுவார் என தெரிவித்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை உடைப்பேன் எனக் கூறிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும் நாகரிகத்துடன் பேச வேண்டும். அதுதான் மாண்பு. மேலும் கலைஞரை எனக்கு பிடிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு நினைவுச்சின்னம் வைத்துள்ளதால் கலைஞருக்கு நினைவு சின்னம் வைப்பது குறித்து பொதுவாக எதுவும் கருத்து கூற முடியாது. பேனா நினைவு சின்னம் வைத்தால் பாதிப்பு ஏற்படும் என்பது உறுதியான பிறகு தான் இது குறித்து கருத்து கூற முடியும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karunanidhi pen memorial OPS condemned Seeman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->