வரி விவகாரம் : நடிகர் விஜய்-க்கு வரிந்துகட்டி வந்த அரசியல் கட்சி பிரபலம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் வருடம் ரோல்ஸ் ராயல்ஸ் கார் வாங்கிய நிலையில், இதனை இறக்குமதி செய்து வரி விலக்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை நிறைவு பெற்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் அமர்வில் தீர்ப்பு வெளியாகியது. 

அந்த தீர்ப்பில், " இவ்வழக்கு விசாரணை தள்ளுபடி செய்யப்படுகிறது. சட்டத்திற்கு விரோதமாக வரி ஏய்ப்பு செய்வது போல, வரிவிலக்கு கேட்டு மனுதாக்கல் செய்துள்ளதால் ரூ.1 இலட்சம் அபராதம் விதித்து உத்தரவிடப்படுகிறது. ரூ.1 இலட்சம் அபராதத்தை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதியில் செலுத்த வேண்டும். 

திரைத்துறையில் கதாநாயகர்கள் உண்மையான வாழ்க்கையிலும் கதாநாயகர்களாக இருக்கவேண்டும். ரீல் ஹீரோக்கள் ரியலில் ரீலாக இருக்க கூடாது. காருக்கான வரியை 2 வாரத்திற்குள் செலுத்த வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

"இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும், தனக்கு வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை. வரி குறைப்பு கேட்பவர்களை நடிகன் என்று பார்ப்பது தவறு" என்று, காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karthik chidambaram support to actor vijay


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->