இதற்காக மட்டும் தான் என் தந்தையை கைது செய்துள்ளனர்., கார்த்திக் சிதம்பரம் வெளியிட்ட பரபரப்பு தகவல்!!  - Seithipunal
Seithipunal


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை நேற்றிரவு சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐயின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ப.சிதம்பரத்தின் கைதை தொடர்ந்து அவரது மகனும் சிவகங்கை தொகுதியின் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் இந்த சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்ட அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசியதாவது, முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதான இந்த கைது நடவடிக்கையானது மேல்மட்டத்தினருக்கு வளைந்து கொடுக்கும் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை தான் இது. இந்த கைது நடவடிக்கை என்பது அரசியல் பழிவாங்கும் செயலாகும். 

மேலும், காங்கிரஸ் கட்சி மற்றும் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சரின் நற்பெயரை சீர்குலைக்கவும் மற்றும் தொலைக்காட்சிகளில்  பரபரப்பை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கிற்கும் என் தந்தைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அரசியல் ரீதியாகவும் மற்றும் சட்டப்பூர்வமான முறையில் இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார். மேலும், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370 சிறப்பு அந்தஸ்து நீக்கம் பற்றிய விவகாரத்தினை திசை திருப்பவே இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளதாக மத்திய அரசு மீது அவர் குற்றம்சாட்டினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karthick chithambaram says about his father arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->