கர்நாடக காங்கிரஸில் அடுத்த அதிரடி.. 14 பேர் கட்சியில் இருந்து நீக்கம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை சரிந்து. இரு கட்சிகளை சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து ஆளும் கூட்டணி கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

15 எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. இருந்தபோதிலும் பலனில்லை. கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதன் பின்னர், 105 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா நான்காவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார். 

இதையடுத்து, ராஜினாமா கடிதம் கொடுத்த 14 சட்டமன்ற உறுப்பினர்களை கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள். தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14  சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் இதுவரை 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில்,  தகுதி நீக்கம் செய்யப்பட்ட கார்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka14 mlas removed for congress


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->