பாஜக பெரும் பின்னடைவு.. ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ்.. கர்நாடக தேர்தல் ஜுரம்.!   - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் இன்னும் மூன்று மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது .இந்த தேர்தலில் பங்கேற்க கர்நாடக மாநிலத்தின் ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றது.

இந்த தேர்தலை சந்திக்க கட்சியினர் மக்களிடம் இப்போது இருந்து மறைமுக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்டுள்ள சர்வே ஒன்றின் முடிவு பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அந்த சர்வே முடிவில் பாஜகவானது கர்நாடக தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் என்றும், காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தும் என்றும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, பாரதிய ஜனதா கட்சியினர் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கின்றனர். 

எனவே, குஜராத் ஃபார்முலாவை கர்நாடகாவிலும் பயன்படுத்தலாம் என அக்கட்சியினர்த் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இழுபறியிலும் தோல்வி முகத்திலும் உள்ளவர்களை அப்புறப்படுத்தி விட்டு இளம் வயதினருக்கு சீட் கொடுக்கலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka pre election poll result


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->