வருமான வரித்துறை சோதனைக்கு ரஜினி தான் காரணம்! அமைச்சர் பரபரப்பு பேட்டி!! வெளியான திடுக்கிடும் தகவல்!!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில், சட்டத்திற்கு புறம்பான வகையில் பணத்தை கொண்டு செல்லுதல், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்றவற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் பல லட்சம் மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி மற்றும் போதைப்பொருள் போன்ற பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கர்நாடகா மாநிலத்தின் நுண்ணீர் பாசனத்துறை அமைச்சர் சிஎஸ் புட்டராஜு வின் வீட்டிற்கு கலந்த மாதம் 28 தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும், அமைச்சர் சிஎஸ் புட்டராஜூவிற்கு பெங்களூரு, மாண்டியா, மற்றும் மைசூர் ஆகிய 3 இடங்களிலும் உள்ள 17 பொதுப்பணித்துறையைச் சார்ந்த ஒப்பந்ததாரர்கள், மற்றும் நுண்ணீர் பாசன துறையைச் சேர்ந்த 7 அதிகாரிகள் வீடுகளிலும், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், ரூ. 5 கோடி ரொக்கப்பணமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது குறித்து புட்டராஜு செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய 3 குழுவினர் எனது வீட்டில் சோதனை நடத்தினர். மத்திய காவல் பாதுகாப்பு படையை சேர்ந்த 8 பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த சோதனைக்கு சுயேச்சை வேட்பாளரான சுமலதா தான் காரணம். அவர் அவரது குடும்ப நண்பர் ரஜினிகாந்த் உதவியுடன் பா.ஜனதா தலைவரை தொடர்புகொண்டு எனது வீட்டில் சோதனை நடத்த கேட்டுக்கொண்டுள்ளார். எனவே என் வீட்டில் நடந்த சோதனையில் ரஜினிகாந்துக்கும் தொடர்பு உள்ளது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka minister says about rajinikanth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->