மேகதாதுவில் அணைக்கட்ட யாரை கேட்டு பாதயாத்திரை நடத்துகிறீர்கள்? காங்கிரஸ் கட்சிக்கு  உயர்நீதிமன்றம் கேள்வி.!  - Seithipunal
Seithipunal


மேகதாதுவில் அணைக்கட்டுவதை ஊக்குவிக்கும் விதமாக கர்நாடாக மாநில காங்கிரஸார் பாத யாத்திரி மேற்கொள்வது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வளர்ச்சிக்கும், காவிரி டெல்டா விவசாயிகளின் செழிப்பிற்கும், உயர்விற்கும் காலம் காலமாக காவிரியையே நம்பி இருக்கிறார்கள். 

ஆனால், மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சினையை தொடர்ந்து ஊக்குவிக்கும் விதமாக, கர்நாடகா காங்கிரசார் மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடகா அரசை வலியுறுத்தி பாதயாத்திரை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், மேகதாது பாதையாத்திரை விவகாரம் தொடர்பாக மாநில காங்கிரஸ் மற்றும் மாநில அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரணை செய்த கர்நாடக உயர்நீதிமன்றம், "யாரை கேட்டு பாதயாத்திரை நடத்துகிறீர்கள்" என்று காங்கிரஸ் கட்சிக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், "அனுமதியின்றி நடத்தப்படும் பாதயாத்திரையை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது ஏன்?" என்று அம்மாநில அரசுக்கும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதனை தொடர்ந்து, மேகதாது பாதயாத்திரை விவகாரம் தொடர்பாக மாநில காங்கிரஸ் மற்றும் மாநில அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Mekedatu Padayatre


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->