ஆளும்கட்சியா.? அல்லது அலங்கோல காட்சியா.? இரண்டில் ஒன்று இன்றே நிச்சயம்.!  - Seithipunal
Seithipunal


தற்போது கர்நாடகத்தில் ராஜினாமா செய்துள்ள ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 3 பேர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 பேர் என மொத்தம் 10 எம்எல்ஏக்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் இருக்கும் சபாநாயகருக்கு அதனை ஏற்க கோரி உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கடந்த 12ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் 16ஆம் தேதி வரை எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுகுறித்த வழக்கு விசாரணையை 16ஆம் தேதி ஒத்தி வைப்பதாகவும் தெரிவித்தது. 

karnataka assembly, seithipunal

அதன் பிறகு மேலும் ஐந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் அவர்களின் ராஜினாமா கடிதங்களையும் சபாநாயகர் ஏற்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், அந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வக்கீலான முகுல் ரோகத்கி தலைமை நீதிபதி அமர்வில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஆஜராகி இந்த வழக்கில் 5 எம்எல்ஏக்கள் தங்களையும் ஒரு தரப்பாக இணைத்து விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும், அந்த எம்எல்ஏக்களையும் செவ்வாய்க்கிழமையே (16ஆம் தேதி) மற்ற எம்எல்ஏக்களுடன் சேர்த்து இணைத்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றனர். இதன் காரணமாக அந்த 10 எம்எல்ஏக்களுடன் இந்த 5 எம்எல்ஏக்களின் மனுக்களும் சேர்த்து இன்று விசாரிக்கப்படும் என தெரிகிறது.

supreme court, seithipunal

இந்த விசாரணையின் முடிவில் கர்நாடக ஆட்சியின் நிலை குறித்து தெரிந்துவிடும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று பலரும் பயத்துடனும், ஆவலுடனும் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka last judgement in supreme court


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->