ஆட்சியை கவிழ்க்க எடுத்த கடைசி ஆயுதம்.! ஆத்திரத்தில் திணறி போன ஆளும்கட்சி.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சி காங்கிரஸின் துணையுடன் நடைபெற்று வருகிறது. சில நாட்களாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து ராஜினாமாவை ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 14 பேர் ராஜினாமா செய்துள்ளனர். மேலும், ஜேடிஎஸ் கட்சியினர் மூவர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கூட்டணியில் இருந்து விலகிய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து இருக்கின்றது.

சட்டசபையில் ஆளும் கட்சி தனது பலத்தை இழந்து விட்டது. இவர்களுடைய ராஜினாமாவை இன்னும் சபாநாயகர் அங்கீகரிக்கவில்லை என்பதால் தான், ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும், சில எம்எல்ஏக்களும் தொடர்ந்து பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. 

jds, seithipunal

இதனால் ஆத்திரமடைந்துள்ள ஜனதா தளம் கட்சி கர்நாடக மாநிலத்தில் உள்ள எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க ஆயிரம் கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு வருவதாக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து, தங்களது கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் வலைப்பக்கத்தில் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இந்த தொகையில் 10% கூட மணிப்பூர், மிசோரம் மற்றும் சீக்கிய மாநிலங்களில் ஆண்டு பட்ஜெட்டிற்கு ஒதுக்குவதில்லை. எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது? ஊழல் செய்யாமல் இது சாத்தியமா என கேள்வி எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka jds tweet about bjp


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->