கர்நாடகாவில் வெடித்தது போராட்டம்.! எஸ்டிபிஐ, பிஎப்ஐ அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.!  - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் எஸ்டிபிஐ கட்சிக்கும், பிஎப்ஐ அமைப்புகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று, இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி உள்ளனர்.

கர்நாடக : ஷிமோகா மாவட்டம், சீகேஹ‌ட்டியில் கடந்த 20ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஹர்ஷா (வயது 26) மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை பின்னணியில் இஸ்லாமிய அமைப்பினர் இருப்பதாக அம்மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா குற்றம் சாட்டினார். அவரை தொடர்ந்து கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா எஸ்டிபிஐ மற்றும் பிஎப்ஐ அமைப்பு மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், இந்து ஜாகர்ண வேதிகே ஆகிய அமைக்குகள் ஒன்றிணைந்து ஹர்ஷா கொலையை கண்டித்து கர்நாடகாவின் பெங்களூரு, மைசூரு, தார்வாட், பெலகாவி, பாகல்கோட்டை உட்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka hindu partys protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->