இடைத்தேர்தல் தள்ளிவைப்பு உச்சநீதிமன்றத்தில் வெளியான தகவல்! - Seithipunal
Seithipunal


கர்நாடகத்தில் குமார சாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்ற கொண்டிருந்த போது, காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட இரு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் சபாநாயகர் ரமேஷ்குமார் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்க மறுத்தார்.

அதுமட்டுமில்லாமல், 7 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டாதோடு. தற்போது நடைபெற்று வரும் சட்டசபை பதவி காலம் முடியும் அந்த 7 நபர்களும்  தேர்தலில் போட்டியிட முடியாது என சபாநாயகர் ரமேஷ்  அறிவித்தார். இதனால்  காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்த்து குமாரசாமி முதலமைச்சர் பதவியை இழந்தார். இதையயடுத்து 105 எம்.எல்.ஏ.க்களின் பலத்துடன் எடியூரப்பா தலைமையில் கர்நாடகத்தில் பாரதீய ஜனதா அரசு அமைந்தது.

இதற்கிடையே, சபா நாயகரின் நடவடிக்கைக்கு எதிராக தகுதிநீக்கம் செய்யப்பட்ட 7 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து, 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், காலியாக உள்ள 17 சட்டசபை தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என மூன்று நாட்களுக்கு முன் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இரண்டு சட்டசபை தொகுதிகள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 15 பேர் உயர் நீதிமன்றத்தில் புதியதாக தாக்கல் செய்த மனுவில், தங்களை இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை 15 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

இந்தநிலையில்,தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி, 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சிறிது காலம் தள்ளிவைக்குமாறு தேர்தல் கமிஷனை தான் கேட்டுக்கொள்ளப்போவதாக கூறினார். இதைத்தொடர்ந்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வழக்கறிஞர் மற்றும் சபாநாயகர், தலைமைச் செயலாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இடைத்தேர்தலை ஒத்திவைப்பதில் தங்களுக்கும் எந்த ஆட்சேபமும்  இல்லை என தெரிவித்தனர்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகின்ற அக்டோபர் 22 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் ஒத்திவைப்பதாக தேர்தல் கமிஷன் வழக்கறிஞர்  உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பதால், அதுபற்றிய அறிவிப்பை தேர்தல் கமிஷன் விரைவில் வெளியிடும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka election commission says about byelection


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->