அமைச்சரவை விரிவாக்கம்.. முக்கிய புள்ளிகளை சந்திக்கப்போகும் முதலமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வருகின்ற எட்டாம் தேதி டெல்லி செல்ல உள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்லும் அவர்,  பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, உள்துறை  அமைச்சர் அமித்ஷா, கர்நாடக பாஜக மேலிட பொறுப்பாளர் அருண் சிங் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேச உள்ளார். 

இந்த சந்திப்பின்போது கர்நாடக அமைச்சரவையில் காலியாக உள்ள 4 இடங்களை நிரப்புவது, வாரியங்களுக்கு  புதிய தலைவர்களை நியமனம் செய்வது, அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்களுக்கு பதவி வழங்குவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். 

இதனிடையே சிந்தகி, ஹனகல் ஆகிய இரண்டு சட்டமன்ற  தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு வழங்குவது, அந்த தொகுதிகளில் வியூகம் அமைப்பது குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்த உள்ளார். முதலமைச்சரின் டெல்லி பயணத்தை முன்னிட்டு அமைச்சர் பதவியை பெற வேண்டும் என்ற ஆசையில் உள்ளவர்கள் டெல்லி சென்று மேலிடத் தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka cm basavaraj bommai coming 8th going to delhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->