இடைத்தேர்தல் தள்ளிவைப்பு! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி ஆட்சிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கலந்து கொள்ளாததால் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 17 பேரை அப்போதைய சபாநாயகர் ரமேஷ் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.  இந்த நடவடிக்கையை எதிர்த்து அவர்கள் 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையில், கர்நாடகா மாநிலத்தில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21-ம் தேதி  நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் சில நாட்கள் முன்பு அறிவிப்பை வெளியிட்டது. 

இதைத்தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவேண்டும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 ஏம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதால், இந்த வழக்கில் முடிவு அறிவிக்கும் வரை தேர்தலை தள்ளிவைக்க முடியுமா? என உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியது. 

இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், கர்நாடகாவில் நடைபெற இருந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தள்ளிவைப்பு தள்ளிவைக்கப்படும் அறிவித்தது. மேலும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் கோரிக்கை ஏற்று உச்சநீதிமன்றம் தேர்தல் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka by election postponement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->