காவிரியின் குறுக்கே மேகதாதுவில் எதற்க்காக அணை - கர்நாடகா விளக்கம்!!  - Seithipunal
Seithipunal


காவிரி குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடியில் புதிய அணையை கட்ட கர்நாடகா அரசு முடிவு செய்து, அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை,  மத்திய நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்து, புதிய அணை கட்ட ஒப்புதல் வழங்க அனுமதி கோரி இருந்தது. இந்த கோரிக்கையை ஆய்வு செய்த மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன் அணையை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுக்கு, ஒப்புதல் வழங்கியது. 

இதற்கு தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். மேலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. 
         
இந்நிலையில், இது தொடர்பாக கர்நாடகா நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம், மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே பயனளிப்பதாக இருக்கும்; இரு மாநிலங்களும் பயன்படுத்த முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே அணை கட்டுகிறோம் என்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnadaka Minister Talk About Mekathathu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->