கார்கில் போர் குறித்த அரிய  புகைப்படத்தை வெளியிட்ட பிரதமர் மோடி!! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி கார்கில் வெற்றி தினமானது, படை வீரர்களின் வீரம், துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பை நினைவுகூரும் நாளாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு கார்கில் போர்முனையில் எடுத்த சில புகைப்படங்களையும் மோடி பகிர்ந்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் மோடி 20ஆம் ஆண்டு கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு தாய்நாட்டை காக்க உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியத் தாயின் வீர மைந்தர்களுக்காக இதயத்தின் ஆழத்திலிருந்து இந்த நாளில் நான் பிரார்த்திகிறேன் என்றும், நமது வீரர்களின் துணிச்சல், வீரம், மற்றும் அர்ப்பணிப்பை நினைவுகூரும் நாள் தான் இது என பிரதமர் மோடி அதில் தெரிவித்துள்ளார். 

இதை தொடர்ந்து மற்றொரு ட்விட்டர் பதிவிலும், "1999ம் ஆண்டு கார்கில் போரின்போது, கார்கில் சென்று வீரர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது" என குறிப்பிட்டுள்ள மோடி, அதுகுறித்த புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கின்றார். 

ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் கட்சிக்காக 1999ஆம் ஆண்டில் தான் பணியாற்றி வந்ததாக மோடி கூறியுள்ளார். அப்பொழுது, தான் கார்கிலுக்கு சென்று வீரர்களுடன் உரையாடியது, மிகவும் மறக்க முடியாத ஒன்று என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kargil war memorial day


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->