தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும்!! முன்னாள்  நிர்வாகி போர் கொடி!! - Seithipunal
Seithipunal


தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி மீது முறைகேடு புகார் கூறி, மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி கராத்தே தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ் சிலைக்கு, மாலை அணிவித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, கே எஸ் அழகிரி தனது சொந்த மாவட்டமான சிதம்பரத்தில் மறைந்த காங்கிரஸ் தலைவர் காமராஜ் பெயரில் கல்லூரி ஒன்றை நடத்தி வருவதாகவும். அந்த கல்லூரியின் உரிமையாளர்களாக அவரது மனைவி, மகள்கள் என குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கல்லூரியில் கப்பல் தொழில் நுட்ப சார்ந்த பல்வேறு படிப்புகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.

கப்பல் தொழில் நுட்பம் தொடர்பாக 6 மாதகால பயிற்சி அளிக்க 720 மாணவர்களிடம் இருந்து, 42 கோடி ரூபாய்  அளவில் பணம் வசூலிக்கப்பட்டு, மேலும் பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கல்லூரி ஏற்படுத்தி தரும் எனவும் அறிவித்திருந்தது. அதில் ஒரு நாள் மட்டுமே மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி மீது முறைகேடு புகார் கொடுத்துள்ளதால், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதிவிலிருந்து கே எஸ் அழகிரயை நீக்க வேண்டும் என  கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karatea thiyagrajan press meet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->