20 வருடங்களுக்கு முந்தைய சம்பவம்! நண்பர் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கும் ஸ்டாலின்! புயலை கிளப்பும் கராத்தே தியாகராஜன்! அதிர்ச்சியில் திமுக!  - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக தமிழக உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற சில பணி நியமனங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா என முதலமைச்சர் பழனிசாமிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டிருந்தார். இதனையடுத்து அமைச்சர் வேலுமணி திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு உள்ளிட்ட திமுக அதிமுக தரப்பில் பலரும் அறிக்கை போரில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் கராத்தே தியாகராஜன் புதிய புயலை கிளப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு நாட்களாக திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களும் முன்னாள் அமைச்சர் நேரு அவர்களும் உள்ளாட்சித் துறை பற்றி சில கேள்விகள் கேட்டு வருகிறார்கள். குறிப்பாக சென்னை மாநகராட்சியின் முதன்மை பொறியாளராக இருந்த புகழேந்தியை நகராட்சிகள் ஆணையத்தின் தலைமைப் பொறியாளராக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி எப்படி நியமித்தார்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த நியமனத்தில் தமிழக அரசின் அரசாணையை பெறப்பட்டுள்ளது. இந்த நியமனத்திற்கு அண்ணன் ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்டிருக்கிறார். 

நான் அண்ணன் ஸ்டாலினை சிறிய சந்தேக விளக்கம் கேட்க விரும்புகிறேன். அண்ணன் ஸ்டாலின் மேயராக இருந்தபோது அவரது நெருங்கிய நண்பர் ராஜா சங்கரை (மேயருக்கான சிறப்பு அதிகாரி பாலங்கள்) என்று ஒரு புதிய பதவியை உருவாக்கி அவரை அண்ணன் ஸ்டாலின் நியமித்தார். ராஜாசங்கர் நியமனத்திற்கு எந்த அரசாணை கிடையாது, மேயர் மன்றத்தில் ஒப்புதலும் கிடையாது. மேயர் ஸ்டாலின் தலைமையில் இரண்டு மன்ற உறுப்பினர்கள் உள்ள நியமனக் குழு ஒப்புதல் மட்டுமே பெற்று மேயர் ஸ்டாலின் ராஜாசங்கரை இந்த பொறுப்புக்கு நியமித்தார். 

ஆனால் ராஜாசங்கர் மேயருக்கு இணையான அந்தஸ்தில் கமிஷனர் துணை ஆணையர் பணிகள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் ராஜசங்கரிடம் ஆலோசனை மற்றும் உத்தரவைப் பெற வேண்டும். பணி ஆய்வு, டெண்டர் யாருக்கு என்று முடிவு செய்தது என்று சர்வ வல்லமை படைத்த இணையான பதவியை எப்படி வழங்கினார்கள். இதற்கு எந்த வகையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அண்ணன் ஸ்டாலின் சொன்னால் நல்லது. என கராத்தே தியாகராஜன் கேட்டுள்ளார். இந்த விவகாரம் திமுகவிற்கு பின்னடைவை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karate Thiyagarajan questioned dmk leader stalin after 20 years


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->