மொத்த அமைச்சர்களும் எடுத்த அதிரடி முடிவு., விழிபிதுங்கி நிற்கும் குமாரசாமி!! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் ஏற்கனவே இப்போவோ, அப்போவோ என்று ஒரு நெருக்கடியான சூழலில் தான் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 105 இடங்களையும் காங்கிரஸ் 79 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் கைப்பற்றி இருந்தது. ஒரு இடத்தில் சுயேட்சையும், ஒரு இடங்களில் பகுஜன் சமாஜ்வாதி, KPJP கட்சியும் வெற்றி பெற்றிருந்தது. 

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைத்தனர். மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தற்போது ஆட்சி நடைபெற்று வருகின்றது.  

இந்நிலையில் அவ்வப்போது அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கும் எம்எல்ஏக்கள், தொடர்ச்சியாக சமாதானம் செய்யப்பட்டு வந்த நிலையில், 13 காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர்.

இதனிடைய, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக துணை முதமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் அமைச்சர்களின் ராஜினாமாவால் முதலமைச்சர் குமாரசாமிக்கு நெருக்கடி மேலும் அதிகமாகியுள்ளது. இதனிடைய ராஜினாமா செய்த 13 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை சமதானம் செய்து அவர்களுக்கு அமைச்சர் பதவி தரவும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் 21 அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் ஜனதா தள அமைச்சர்களும் ராஜினாமா. காங்கிரஸ்-ஜனதா தள கூட்டணி அரசின் மொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karanataka total ministers resign his post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->