அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை தட்டி தூக்கிய திமுக.. அதிர்ச்சியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில்‌, 6.10.2021, 9.10.2021 ஆகிய தேதிகளில்‌ ஊரக உள்ளாட்சித்‌ தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் முன்னிலையில், கன்னியாகுமரி மாவட்டம் - அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக பெருந்தலைவர் எஸ்.அழகேசன், குமரி கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் பி.செந்தில்முருகன் உள்ளிட்ட அதிமுக - அமமுக - நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

இவர்களை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanyakumari admk members join dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->