காங்கிரஸ் கட்சிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. ஸ்டாலின் எடுத்த முடிவால் மகிழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர்.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி தொகுதி எம்பி ஆக இருந்த வசந்தகுமார் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி காலமானார். அவரது மறைவை அடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதியில் பிப்ரவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 

தற்போது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பற்றி அனைத்து கட்சிகளும் ஆலோசனை நடத்தி வருகிறது. அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்க அதிகளவில் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தென் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் தி மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். அப்போது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சட்டமன்ற தேர்தலில் மட்டும் நாம் கவனம் செலுத்தினால் போதும். கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் நமக்கு முக்கியம் இல்லை என்று ஸ்டாலின் கூறியதாக தகவல் நிலை உள்ளது. 

மேலும் காங்கிரஸ் சிட்டிங் தொகுதி என்பதால் அது அவர்களுக்கே கொடுத்து விடலாம் என்கின்ற ரீதியில் ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanniyakumari my election for congress


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->