பாஜக நிர்வாகி தற்கொலையில் திடீர் திருப்பம்.! சிக்கிய கடிதம் - சிக்கலில் காவல்துறை.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி மேல ரத வீதியைச் சேர்ந்தவர் வினீஷ். இவர் பாஜகவின் நிர்வாகியாக இருந்து வந்தார். இவர் மீது கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கும், சாட்சியைக் கலைத்ததற்காக ஒரு வழக்கும் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தொழில் போட்டி காரணமாக பூதப்பாண்டியை சேர்ந்த கோபாலன் உடன் ஏற்பட்ட தகராறில் வினீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று, காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். 

இந்த நிலையில், பூதபாண்டிய அடுத்த சுடுகாட்டுப் பகுதியில், வினீஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலிருந்து வந்த போலீசார், வினீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அவர் சட்டைப் பையில் இருந்து, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.,க்கு எழுதிய நான்கு பக்க தற்கொலை கடிதம் ஒன்றும் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. 

அந்த தற்கொலை கடிதத்தில், "நான் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக கேபிள் இணைப்பு வழங்கும் தொழில் செய்து வருகிறேன். பூதப்பாண்டி பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட கேபிள் இணைப்புகளை பராமரித்து வருகிறேன்.

என்னை போலவே கோபாலன் என்ற நபரும் இதே தொழில் செய்து வருகிறார். ஆனால் கோபாலனுக்கு நாளுக்கு நாள் கேபிள் இணைப்புகள் குறைந்து வந்தது. இதனால் என்னுடைய இணைப்புகளை அவருக்கு தர வேண்டும் என்று தகராறு செய்தார்.

இதற்க்கு நான் மறுக்கவே, அவரின் கேபிள் இணைப்புகளை நான் துண்டித்து விட்டதாக கூறி, பூதபாண்டி காவல் நிலையத்தில் பொய் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, நான் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.

இந்த வழக்கில் பூதபாண்டி காவல் நிலைய ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். நான் சிறையில் இருந்த போது, என்னை இருவரும் அடித்து, உதைத்து துன்புறுத்துவதோடு, எனக்கு மிரட்டலும் விடுத்தனர். 

மேலும், பூதப்பாண்டி காவல் நிலைய ஆய்வாளரும், துணை ஆய்வாளரும் என்னிடம் மிரட்டி ஒன்றரை லட்சம் பணம் வாங்கிக் கொண்டனர். 

கடந்த ஐந்தாம் தேதி நான் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தபோது, என்னை சந்தித்த கோபாலன், 'உனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறதா? உன்னை திருமணம் செய்ய விட மாட்டோம். அதை மீறி நீ திருமணம் செய்தாலும், உன்னை வாழ விடமாட்டோம்' என்று மிரட்டல் விடுத்தார்.

என் மீது ஏற்கனவே கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதால், கடந்த 9 ஆண்டுகளாக எந்த வித குற்ற செயல்களிலும் ஈடுபடாமல், நான் திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னால் இனி மேலும் பிணைக்கைதி வாழ்க்கையை வாழ முடியாது. எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்.

என்னுடைய இறப்புக்கு கோபாலன், பூதப்பாண்டி காவல் நிலைய ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஆகிய மூன்று பேர் மட்டும் தான் காரணம்" என்று அந்த கடிதத்தை வினிஷ் தெரிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகியின் இந்த தற்கொலை கடிதம், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாஜகவினர் இந்த விவகாரத்தை கையில் எடுத்து, காவல்துறைக்கு எதிராக கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட வினிஷ்.,க்கு அடுத்த வாரம் திருமணம் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanniyakumari bjp vinish suicide case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->