கனிமொழி தான் அடுத்த முதலமைச்சர்.! தமிழக அரசியலில் பரபரப்பை உண்டாக்கிய பதிவு.! - Seithipunal
Seithipunal


உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதேபோல் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று, திமுக எம்பி கனிமொழி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இவரின் பதிவுக்கு பதிலளித்துள்ள பாஜகவின் பிரமுகர் காயத்ரி ரகுராம், "திமுகவில் முதலமைச்சராக இருக்க உங்களுக்கு இட ஒதுக்கீடு தருவார்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காயத்ரி ரகுராம் எழுப்பிய இந்த கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், திமுகவில் பெண்ணுரிமை போற்றப்படுவதால் வருங்காலத்தில் கனிமொழி முதலமைச்சராக வருவார்  என்று திமுக உடன் பிறப்புகள் பதில் அளித்து வருகின்றனர்.

அதே சமயத்தில், திமுக தலைவர் மு க ஸ்டாலின் மட்டுமே நிரந்தர முதலமைச்சர் என்றும் திமுக உடன்பிறப்புகள் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே கனிமொழி VS ஸ்டாலின் என்று இரண்டு தரப்புகள் இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதில், கனிமொழி தரப்புக்கும், மு க ஸ்டாலின் தரப்புக்கும் இடையே நிறைய முரண்பாடுகள் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த பிரமுகர் காயத்ரி ரகுராம், முதலமைச்சராக உங்களுக்கு இட ஒதுக்கீடு தருவார்களா என்று கனிமொழிக்கு கேள்வி எழுப்பி தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanimozhi the next cm


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->