தூத்துக்குடி தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல்.,தகவலை வெளியிட்ட தலைவர்!! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. பா.ஜனதா கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான மேற்பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை:-

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா பின்னடைவை சந்தித்ததையொட்டி கட்சியை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பேசிய அவர்,  தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி வேட்புமனுவில், தனது கணவர், மகன் ஆகியோரது வருவாய், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை மறைத்துள்ளார். அதுகுறித்தும், தேர்தல் நடத்தை விதி மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டு குறித்தும் நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். 

மேலும் 2 ஜி வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்குகளின் விசாரணையின் முடிவில் தூத்துக்குடி தொகுதிக்கு இடைத்தேர்தல் வரலாம். பாரதீய ஜனதாவின் உறுப்பினர் சேர்க்கைக்காக தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன் என தமிழிசை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanimozhi says about tuticorin parliament


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->