கனிமொழியின் எம்பி பதவிக்கு நீடிக்கும் சிக்கல்! கலக்கத்தில் திமுக!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதியிலும், அதிமுக 09 தொகுதியிலும் வெற்றி பெற்றது.

அந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழியும், பாஜக சேர்ப்பில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் களமிறங்கினார். அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தமிழிசை சௌந்தரராஜனை வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் திமுக எம்பி கனிமொழி பணம் பட்டுவாடா செய்து வெற்றி பெற்றதாக தமிழிசை சௌந்தராஜன் தேர்தல் நடந்தபோது குற்றம்சாட்டியிருந்தார். 

மேலும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தமிழிசை சௌந்தராஜன் மற்றும் அத்தொகுதியை சேர்ந்த வாக்காளர் சந்தான குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

கடந்த வாரம் வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் எதிர்மனு தாரராக சேர்க்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே தமிழிசை தரப்பில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தனியாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கையும் இந்த வழக்குடன் சேர்த்து பட்டியலிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த இரு வழக்குகளிலும் கனிமொழி உட்பட எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தி வழக்கு விசாரணையை வரும் 23 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கோரி தமிழிசை மனு தாக்கல் செய்தார். மனு குறித்து கருத்து தெரிவிக்க ஏதுவாக, உரிய நோட்டிசை அரசிதழில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மனு மீதான விசாரணை அக்டோபர் 14க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanimozhi mp case for tamilisai


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->