ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 6.10.2021, 9.10.2021 ஆகிய தேதிகளில்‌ இரண்டு கட்டமாக நடைபெறும்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுரேஷ்குமார், ராயப்பன், தனலட்சுமி, பவானி, ஜான்சிராணி, கவிமணி, வில்லியம்ஸ், காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பாலமுருகன். 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஜாபர் அலி, மணிவண்ணன், செல்சந்திரன், நிதா செல்வா, சுகுமார், சிவகுமார், உஷாராணி, பவானி, சுகுமாரியம்மன், வேல்முருகன், நந்தினி, ஆனந்தி, கோவிந்தராஜ், சந்திரமோகன், லலிதா, சுரேஷ். 

திருக்கழுக்குன்றம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தினேஷ், அங்கம்மாள், அன்பரசன், ராஜா, நேதாஜி, தேவராஜ், பூங்காவனம், வனிதா, வெங்கடேசன், அனிதா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanchipuram district NTK party local body election candidate list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->