ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 6.10.2021, 9.10.2021 ஆகிய தேதிகளில்‌ இரண்டு கட்டமாக நடைபெறும். வேட்புமனு தாக்கல் இன்று செப்டம்பர் 15 தொடங்கி, செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனிடையே அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், கூட்டணி கட்சிகளுக்கு இல்லங்கள் ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுகவின் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தாமோ அன்பரசன் வெளியிட்டார். 115 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலில் கூட்டணி கட்சியினருக்கும் வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanchipuram district local body election dmk candidate list


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->