பாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல.. மகிழ்ச்சியுடன் கமல் பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டது. முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் நடந்து முடிந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக 09 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. திமுக 13 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 

நடந்து முடிந்த தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியவை, எதிர்ப்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர், வாக்களித்த மக்களுக்கு நன்றி. மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம், நல்ல வழியில் தான் நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம்.

பாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல, 14 மாதத்தில் எங்களால் என்ன முடியுமோ, அதை செய்துள்ளோம். தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை. பணப் புயலுக்கு நடுவில் இந்த இலக்கை தொட்டதே சாதனை தான், நேர்மைக்கு நாங்கள் தான் "ஏ" டீம் என்று கூறினார்.

தலைவர்கள் மரணத்தால் அரசியலில் ஒருபோதும் வெற்றிடம் உருவாகாது, வெற்றிடம் உருவாக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தமிழகத்தின் எழுச்சி தான் எங்கள் இலக்கு. விவசாயத்திற்கு பாதிப்பு இல்லாத திட்டங்களை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal thanks for tn peoples


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->