மூன்றாவது அணியின் முதல்வர் வேட்பாளர்.! கமலஹாசன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


வரும் ஜனவரி மாதம் கூட்டணி குறித்தான அறிவிப்பு வெளியிடப்படும் என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, அரசு மருத்துவமனைகளில் பெண் குழந்தைகள் பிறந்தால் 300 ரூபாயும், ஆண் குழந்தை பிறந்தால் 1000 ரூபாயும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம் வாங்குவது அதிகரித்து உள்ளதாக தமிழக அரசு மீது குற்றம் சாட்டினார். 

கட்சி தொடங்குவதில் ரஜினி நாடகமாடுகிறார் என்று குற்றச்சாட்டு பதிலளித்த கமலஹாசன், ரஜினிகாந்தின் உடல்நலத்தில் அடிப்படையில் யூகமான தகவல்கள் வெளியிடக்கூடாது. அவர் உடல்நலம் சரியான பின் அரசியல் கட்சி தொடர்பான பணிகளை தொடங்குவார்.

கூட்டணி குறித்து வரும் ஜனவரி மாதம் மக்கள் நீதி மையம் முடிவு எடுத்து அறிவிக்கும் என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் மூன்றாவது அணி அமையும் என்றும் கமலஹாசன் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal press meet dec28


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->