தாயி கையாள பணம் வேண்டும்.. ஸ்ரீ பிரியாவிடம் வம்பு செய்த குடிகார ரசிகர் அட்ராஸிட்டிஸ்..!! - Seithipunal
Seithipunal


வாக்கு சேகரிப்பதற்காக சென்ற மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீ பிரியாவிடம், ரசிகர் ஒருவர் பணம் கேட்டு வம்பு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக நடிகை ஸ்ரீபிரியா களமிறங்கியுள்ளார். அந்த தொகுதியில் உள்ள குப்பைகளை நான் அகற்றுவேன் என்று வாக்கு சேகரித்து வரும் நிலையில், அங்கு இசைக்கப்பட்ட பேண்ட் வாத்தியத்திற்கு ஏற்ப நோயாளி ஒருவர் தொண்டர்களுடன் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார். 

இதன்போது அங்கு வந்த வேட்பாளர் ஸ்ரீபிரியாவை பார்த்து உற்சாகமான அவர், தனக்கு செலவுக்கு பணம் வேண்டுமென்று கையேந்த, எல்லோரும் நம்மைப் பார்த்து கொண்டு இருக்கிறார்கள், அதனால் பணம் தரமுடியாது என்று ஸ்ரீபிரியா கூறியுள்ளார். 

இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட ஸ்ரீபிரியா பணம் கொடுக்க முடியாது என்று கூறவே, அந்த குடிகார நோயாளி அங்கிருந்து செல்ல மறுத்த அடம் பிடித்துள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த நடிகை ஸ்ரீபிரியா, பணம் கேட்டு அந்த குடிகாரரை இலாவகமாக பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினரிடம் சிக்க வைத்துச்சென்றார். 

விசாரணையில், அந்த நோயாளி தொண்டர் வாழ்வே மாயம் காலத்திலிருந்து கமலின் தீவிர ரசிகர் என்றும், சிவகங்கையை சேர்ந்த பாண்டிராஜ் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இதய நோயாளியான அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல், சொந்த ஊர் தப்பி வந்த போது எதர்சையாக நடிகை ஸ்ரீபிரியாவை சந்தித்த நிலையில், அவரது கையால் பணம் வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Hassan Fan Atrocity with Actress Sri Priya Candidate of Mylapore Constituency


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->