சசிகலா மீது வீண்பழி சுமத்தவில்லை.. அதிமுக அமைச்சர் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று வெள்ளாங்கோட்டை, வலசால்பட்டி, சூரியமினுக்கன், திருமங்கலக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு வெள்ளாங்கோட்டையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது முதல்வரோ, அமைச்சர்களோ, கட்சியினரோ வீண்பழி சுமத்தவில்லை. இயற்கையாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லை. 78 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இது ஊர் அறிந்த உண்மை. அப்போது முதலமைச்சராக இருந்தது ஓபிஎஸ் தான். 

பல்வேறு விமர்சனங்கள் வந்தால் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காகதான் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையை திறந்தது திமுக தான், அதன் விரிவாக்கத்திற்கு கையெழுத்திட்டது ஸ்டாலின்தான். இந்த வருமானம் நின்று போய் விட்டதே என்ற வருத்தத்தில் அவர் கூறுகிறார். 

தூத்துக்குடியில் ஒரு அசம்பாவிதம் நடந்தது. எதிர்பாராதவிதமாக தூண்டிவிடப்படும் மக்கள் உயிர் போனது. இது விரும்பத்தகாத சம்பவம். இதற்கு என்ன நிவாரணமோ  அதனை அரசு செய்தது. உடனடியாக அந்த ஆலையை அதிமுக அரசு முடியாது.கோவில்பட்டியில் தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதையும் முதலமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadambur raju press meet about jayalalithaa death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->